தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ240 உயர்வு – மீண்டும் கலக்கத்தில் இல்லத்தரசிகள்!!!

0

தங்கம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ240 உயர்வு:

கொரோனா பரவலை காட்டிலும் தங்கத்தின் விலை தான் மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது, நேற்று தங்கத்தின் விலை விட இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,615 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,585 ரூபாயாக இருந்தது.

மேலும் நேற்று 36,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 240 ரூபாய் உயர்ந்து 36,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டெல்லியில் இன்று தங்கம் விகிதம் 22 காரட் 10 கிராமுக்கு 46,700 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. தேசிய தலைநகரில் தங்கத்தின் விலை ரூ.50,900.

மும்பையில் தங்கத்தின் விலை 22 காரட் 10 கிராமுக்கு 47,960 ரூபாய். மும்பையில் 24 காரட் தங்க வீதம் 10 கிராமுக்கு 48,960 ரூபாய். பெங்களூரில் தங்கத்தின் விலை 22 காரட் 10 கிராமுக்கு ரூ .45,500. கர்நாடக தலைநகரில் தங்கத்தின் வீதம் 10 கிராமுக்கு 24 காரட் ரூ.49,640.

அதுமட்டுமல்லாமல் வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை  ரூ.76.30 ஆக உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 76,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here