புளூ டிக் சர்ச்சையும்…ட்விட்டர் விளக்கமும்!!!

0

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் அக்கவுண்டில் நீல நிற  டிக்கை ட்விட்டர் நீக்கியது. அது மிகப்பெரிய சர்ச்சையை கிளம்பியதை அடுத்து மீண்டும் அவரது தனிப்பட்ட கணக்கில் நீல நிற  டிக் சேர்க்கப்பட்டது. மேலும் அதற்கான விளக்கத்தை  ட்விட்டர் அறிவித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது உள்ள சூழலில் தங்கள் பொழுதை போக்க அனைவரும் சமூக ஊடகங்களையே சார்ந்து இருக்கிறனர். அதிலும் ட்விட்டர் பங்கு மிக முக்கியமானது. மக்கள் தங்களின் கருத்துக்களை பரிமாறி கொள்ளும் முக்கிய ஊடகமாக ட்விட்டர் விளங்கி வருகிறது. இந்நிலையில்  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்த புளூ டிக் நீக்கப்பட்டது. இது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியதை அடுத்து மீண்டும் அது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் புளூ டிக் நீக்கப்பட்டதற்கான விளக்கத்தை ட்விட்டர்  அளித்துள்ளது. அதாவது துணை ஜனாதிபதி அவர்களின் தனிப்பட்ட  கணக்கானது 2020-யில் ஜூலை மாதத்திலிருந்து  பயன்பாட்டில் இல்லாததால், நீல நிற டிக் திரும்பப் பெறப்பட்டதாக பதில் அளித்தது. இப்பொழுது குடியரசு துணைத் தலைவரின்  தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிற்கு மீண்டும் நீல நிற டிக் வழங்கப்பட்டு உள்ளது எனவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here