நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் நாயகியின் இன்ஸ்டாகிராம் முடக்கம் – டிவீட்டர் பக்கத்தில் விளக்கம்!!!

0
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் நாயகியின் இன்ஸ்டாகிராம் முடக்கம் - டிவீட்டர் பக்கத்தில் விளக்கம்!!!

பல திரை பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த சூழ்ச்சியில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் நாயகியும் சிக்கியுள்ளார். அந்த அக்கௌன்ட்டை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறார்.

முடக்கப்பட்ட இன்ஸ்டாகிராம்:

மக்கள் பலரும் சமூக வலை பக்கங்களில் தான் அதிகமாக நேரத்தை செலவிட துவங்கிவிட்டனர். 60 வயது முதியவர்களுக்கு கூட இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் அக்கௌன்ட் இருக்கிறது. நாளுக்கு நாள் மக்கள் இந்த ஆன்லைன் மோகத்தில் மூழ்க ஆரம்பித்துவிட்டனர். அதே சமயத்தில் ஹேக்கர்களும் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள்.

பல திரையுலக பிரபலங்களை குறி வைத்து அவர்களின் இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் அவ்வப்போது ஹேக்கர்களால் முடக்கப்பட்டு வருகிறது.தற்போது இந்த வலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் நாயகியின் காயத்ரியும் சிக்கியுள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நேற்று ஹேக்கர்கள் முடக்கி விட்டனர்.

இந்த செய்தியை காயத்ரி டிவீட்டர் பக்கத்தில் அறிவித்து எனது அக்கௌன்ட்டில் இருந்து ஏதேனும் செய்தி வந்தால் அதனை கண்டுகொள்ள வேண்டாம். எனது அக்கௌன்ட்டை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன் என கூறியுள்ளார். காயத்ரி அக்கௌன்ட்டில் இருந்து திரைப்பட நடிகரும், பிண்னணிப் பாடகருமான பிரேம்ஜி அமரனுக்கு செய்தி வந்ததாக ட்வீட் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here