தமிழகத்தில் மே 10 முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு – முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

1
கொரோனா பரவல் எதிரொலி - மாநிலத்தில் இந்த 2 நகரங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்!!
கொரோனா பரவல் எதிரொலி - மாநிலத்தில் இந்த 2 நகரங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்!!

தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை குறைக்கும் வகையில் தற்போது ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – இந்திய அணி அறிவிப்பு!!

தற்போது இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் தெரிவித்து வந்தனர். தற்போது அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தமிழகத்தின் புதிய முதல்வரான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் வருகிற மே மாதம் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு மேற்கொள்ளப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.

கட்டுப்பாடுகளும் தளர்வுகளும்:

  • ஊரடங்கின் பொழுது அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்து அரசு துறைகளும் இயங்க தடை.
  • பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும்.
  • வங்கிகளில் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
  • அம்மா உணவகங்கள் ஊரடங்கின் பொழுது இயங்கும்.
  • தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை.
  • ஊரடங்கின் பொழுது டாஸ்மாக் கடைகள் இயங்க தடை.
  • மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி.
  • காய்கறி, பூ போன்ற நடைபாதை விற்பனையாளர்களுக்கு 12 மணி வரை செயல்பட அனுமதி.
  • ஹோட்டலிகளில் பார்சல் சேவைக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி.
  • தேனீர் கடைகள் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி.
  • அனைத்து தனியார் மற்றும் ஐடி நிறுவனங்கள் இயங்க தடை.
  • அனைத்து அழகு நிலையங்கள் இயங்க தடை.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here