உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – இந்திய அணி அறிவிப்பு!!

0

வருகிற ஜூன் மாதம் 18ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ளது. அதில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. தற்போது அதில் விளையாடப்போகும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

கடந்த 2019ம் ஆண்டு டெஸ்ட் தொடரை ஊக்குவிக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதற்கான இறுதி போட்டி இந்த ஆண்டு வருகிற ஜூன் மாதம் 18ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணி முதலாவதாக முன்னேறியது. இறுதி போட்டிக்கு முன்னேற போகும் மற்றொரு அணி யார் என்பது குறித்து தொடர்ந்து இழுபறி இருந்து வந்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் தனுஷின் ‘கர்ணன்’ – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிக சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி அந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இரண்டாவது அணியாக முன்னேறியது. தற்போது அதற்கான இந்திய அணி வீரர்களின் விவரத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் இந்த அணி இதற்கு பின்பு நடக்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்:

விராட் கோஹ்லி(C), ரஹானே(VC), ரோஹித் சர்மா, சுப்மங் கில், மயங் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷாப் பாண்ட்(WK), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமத் ஷமி, சிராஜ், தாகூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், சஹா.(ராகுல் மற்றும் சஹா அவர்கள் இருவரும் உடற்தகுதி பொறுத்தே தேர்வு செய்யப்படுவர்).

ரிசர்வ் வீரர்கள்:

அபிமன்யு ஈஸ்வரன், பிரஷித் கிருஷ்ணா, ஆவேஸ் கான், அர்சன் நாகவசவாலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here