மங்களகரமான வெள்ளிக்கிழமை ராசிபலன்கள் 06/03/2020 – வாழ்வில் சிறக்க வாழ்த்துக்கள்..!

0

ENewz வாசகர்களே, இன்று உங்கள் ராசிக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதுகுறித்த விபரங்களை உடனுக்குடன் பெற நமது ENewz பேஸ்புக், யூடுப் மற்றும் வாட்ஸ்ஆப் சேனனில் இணைந்து உடனுக்குடன் பெறுங்கள்.

மேஷ ராசிபலன்:

மேஷ ராசி நணபர்களே, நீண்ட காலமாக நிதி நெருக்கடியைச் சந்தித்தவர்கள், இன்று எங்கிருந்தும் பணம் பெறலாம், இது வாழ்க்கையின் பல சிக்கல்களை நீக்கும். உங்கள் துணையுடன் திருமண பந்தத்தில் இணைந்த்தை உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக இன்று எண்ணுவீர்கள். நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் கலந்து பேசுவது உங்களுக்கு நல்ல ஐடியாக்களையும் பிளான்களையும் தரும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, வெள்ளை மற்றும் வெள்ளி உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

ரிஷப ராசிபலன்:

ரிஷப ராசி நண்பர்களுக்கு, இன்று நீங்கள் எந்த உதவியும் இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது நல்ல மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் திருமணத்துக்கும் முன் ஒருவரை ஒருவர் கவர செய்த விஷயங்கள், காதலித்த அந்த இனிமையான நாட்களை இன்று நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். மாற்றப்படாமல் இருக்க பிசினஸில் விழிப்பாக இருக்கவும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மிதுன ராசிபலன்:

மிதுன ராசி அன்பர்களே, தெரியாத நபரின் ஆலோசனையின் பேரில் எங்காவது முதலீடு செய்தவர்கள், இன்று அவர்கள் அந்த முதலீட்டிலிருந்து பயனடைய வாய்ப்புள்ளது. உங்கள் துணை இது போல அற்புதமாக இது வரை இருந்ததில்லை. உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து நீங்கள் இன்று ஒரு இனிய சர்ப்ரைசை எதிர்பார்க்கலாம்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நீலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கடக ராசிபலன்:

கடக ராசிக்காரர்களே, மனதை தெளிவாக வைத்திருக்க குழப்பத்தையும் வெறுப்பையும் தவிர்த்திடுங்கள். உங்களின் உறுதிப்பாடு கவனிக்கப்படும். உங்கள் திறமைகளும் கவனிக்கப்படும். வாழ்வில் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் நடப்பதற்கு நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தால் – நிச்சயமாக சிறிது ரிலீப் கிடைக்கும். உங்கள் துணையுடன் நேரம் செலவிடும் மிக சிறந்த நாளாக இன்று அமையும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நிலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

சிம்ம ராசிபலன்:

சிம்ம ராசி அன்பர்களே, இந்த ராசியின் இன்றைய பெரிய வணிகர்கள் பணத்தை மிகவும் சிந்தனையுடன் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் நேசிப்பவருக்கு பரிசுகள் கொடுக்கவும், அவரிடம் இருந்து பரிசு பெறவும் நல்ல நாள். இன்று, உங்கள் துணையுடன் இன்பமாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கன்னி ராசிபலன்:

கன்னி ராசி வாசகர்களே, நீங்கள் நீண்ட பயணத்துக்கு திட்டமிடுவதால், ஆரோக்கியமும், சக்தியை செலவிடாத குணமும் அதிக பயன் தரும். உங்கள் சக்தியையும், ஆசையையும் புத்துணர்வூட்டும் வகையில் இன்ப சுற்றுலா செல்லக் கூடும். உண்மையான காதலை நீங்கள் இன்று உணர்வீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நிலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

துலாம் ராசிபலன்:

துலாம் ராசி அன்பர்களுக்கு, பணம் உங்களுக்கு முக்கியம், ஆனால் உங்கள் உறவுகளை கெடுக்கும் அளவிற்கு பணத்தைப் பற்றி அவ்வளவு தீவிரமாக இருக்க வேண்டாம். காதல் – துணையும் பிணைப்பும் அதிகரிக்கும். இன்று உங்கள் உங்கள் வாழ்க்கை துணைவர்/துணைவி அற்புதமான காதல் மூடில் இருப்பார்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, வெள்ளி மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

விருச்சிக ராசிபலன்:

விருச்சிக ராசி அன்பர்களே, கோபத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். கோபம் உங்களை அழிப்பதற்கு முன்பு நீங்கள் அதை அழித்துவிடுங்கள். உங்கள் ஓய்வு நேரத்தை தேவையற்ற சிக்கல்களிலிருந்து விலகி எந்த கோவிலிலும், குருத்வாராவிலும் அல்லது எந்த மத இடத்திலும் செலவிடலாம். உங்களுக்குள் நிகந்த சிறு ஊடலை மறந்து உங்கள் வாழ்க்கை துணை அன்புடன் தழுவிக்கொள்வார்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 4, காவி மற்றும் சாம்பல் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

தனுசு ராசிபலன்:

தனுசு ராசி வாசகர்களே, ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்கள் வேலையில் திறமையை அதிகரிக்க புதிய டெக்னிக்குகள் பயன்படுத்துங்கள். உங்களை நெருக்கமாக கவனிப்பவர்கள், உங்களுடைய ஸ்டைல் மற்றும் தனிப்பட்ட செயல்முறையில் ஆர்வம் கொள்வார்கள். உங்கள் துணைக்கு அடிகடி சர்ப்ரைஸ் கொடுத்து அசத்துங்கள். இல்லை என்றால் அவருக்கு நீங்கள் முக்கியம் இல்லையென்று தேன்றலாம்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மகர ராசிபலன்:

மகர ராசி அன்பர்களே, ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள். உடல் நலமின்றி இருக்கும் உறவினரை போய்ப் பாருங்கள். தினசரி தேவைகளை கவனிக்க தவறியதால் இன்று மன அழுத்தம் ஏற்படும். அது உணவு, சுத்தம் செய்து, வீட்டு வேலை போன்ற விஷயமாகவும் இருக்கலாம்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கும்ப ராசிபலன்:

கும்ப ராசி நேயர்களே, எந்த உதவியும் இல்லாமல் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும், நீங்கள் உங்களை நம்ப வேண்டும். குழந்தைகளுக்கு வீட்டு வேலையை முடிக்க உதவிக்கரம் நீட்ட வேண்டிய நேரம். நாள் சிறப்பாக இருக்க, நீங்களே நேரத்தை செலவிட கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் துணையின் கண்டிப்பான பேச்சால் இன்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 7, கிரீம் மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மீனம் ராசிபலன்:

மீன ராசி அன்பர்களே, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது உங்கள் கருத்துகளைத் திணிக்காதீர்கள். அது உங்கள் நலனுக்கு நல்லதாக இருக்காது. இன்று உங்களுக்கு ஒரு சிறந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். இன்று மாலை உங்கள் துணையுடன் செலவிடும் நேரம் இன்பமாக அமையும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 5, பச்சை மற்றும் நில பச்சை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here