முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

0
முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று 75வது சுதந்திர தின விழா 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தினவிழாவை முன்னிட்டு மத்திய அரசு பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுதந்திர தின விழா

இந்திய நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் நாள் நாட்டின் சுதந்திர தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்த விழாவை சிறப்பாக கொண்டாட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய குடிமக்கள் அனைவரும் வருகிற ஆகஸ்ட் 13,14,15 ஆகிய 3 நாட்களில் தங்களின் வீடுகளில் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என்று பாரத பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன் புறத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ தேசியக் கொடியை ஏற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் தேசிய கொடியை தங்களின் பகுதிக்கு அருகே உள்ள அஞ்சல் நிலையங்களில் வாங்கி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏனெனில் இதற்கென அஞ்சல் நிலையங்களில் தேசிய கொடிகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை www.indiapost.gov என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று பல்வேறு அறிவிப்புகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மெரினாவில் நடைபெற உள்ளது சுதந்திர தின விழாவில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய அரசு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதாவது, நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் நாட்டில் இதுவரை பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச்சின்னங்கள், முக்கிய சுற்றுலா தலங்களை இலவசமாக பார்வையிடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இந்த இலவச அனுமதி நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் நாளை (ஆகஸ்ட் 5) முதல் சுதந்திர தினவிழா (ஆகஸ்ட் 15) வரை எந்தவித கட்டணமின்றி இலவசமாக பார்வையிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here