தமிழக 11ம் வகுப்பு பாடப்பிரிவில் புதிய பாடம் அறிமுகம் – கல்வியாண்டு முதல் அறிமுகம்!

0
தமிழக 11ம் வகுப்பு பாடப்பிரிவில் புதிய பாடம் அறிமுகம் - கல்வியாண்டு முதல் அறிமுகம்!
தமிழக 11ம் வகுப்பு பாடப்பிரிவில் புதிய பாடம் அறிமுகம் - கல்வியாண்டு முதல் அறிமுகம்!

தமிழகத்தில் 11ம் வகுப்பு பாடப்பிரிவில் தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாட நூல்களை சீரமைக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழு பரிந்துரையின் படி 11ம் வகுப்பு பாடப்பிரிவில் மிகவும் பயனுள்ள புதிய பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாடத்திட்டம்:

தமிழகத்தில் அரசு/அரசு உதவி புரியும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி முதல் 2022-2023 ம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் தரமான கல்வியை வழங்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை சீரமைக்க உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பாடத்திட்டத்தை சீரமைக்க பல்வேறு பரிந்துரைகளை முன் வைக்கப்பட்டு உள்ளது.

இக்குழு எந்தரவியல்‌, மின்‌ பொறியியல்‌, மின்னணு பொறியியல்‌, நெசவியலும்‌ ஆடை வடிவமைப்பும்‌, செவிலியம்‌, வேளாண்‌ அறிவியல்‌, அலுவலக மேலாண்மையும் செயலியலும் தட்டச்சு கணினி பயன்பாடுகளும்‌, கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும்‌ உள்ளிட்ட 8 படங்களை மறு சீரமைப்பு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் தற்போது பாட நூல்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 11ம் வகுப்பு பாடப் பிரிவில் நடப்பு கல்வியாண்டில் புதிய பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மேலும் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது , 11ம் வகுப்பு பாடப்பிரிவில் 2022-2023 ம் ஆண்டு கல்வியாண்டில் கணினி தொழில்நுட்பம், கணினி பயன்பாடுகள் என்ற பாடத்திற்கு பதிலாக வேலைவாய்ப்பு திறன்கள் என்ற பாடம் மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் இந்த புதிய பாடத்தை tnschools.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடப்பு கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here