பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – முதல்வர் பழனிசாமி துவக்கி வைப்பு!!

0

ஆண்டுதோறும் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்த வருடம் கொரோனா சூழ்நிலை காரணமாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளும், மடிக்கணினிகளும் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.

இலவச மிதிவண்டி

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்கிறது. இதன் மூலம் மாணவர்கள் அனைவரும் பயனடைவார்கள். மேலும் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தும் மாணவர்களுக்காக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை ஊக்குவிக்கும் விதமாக இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 2001ம் தொடக்கி வைத்தார். பின் இத்திட்டத்தின் மூலம் அணைத்து வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இத்திட்டம் செயல்படுகிறது. திமுக ஆட்சி காலத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் அமலுக்கு வந்தது. நாட்டில் உள்ள அணைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் அலுவலகங்களும் மூடப்பட்டன. இதனிடையே ஊரடங்கில் ஏற்பட்ட தளர்வு காரணமாக விருப்பத்தின் பெயரில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர். நடப்பு ஆண்டில் பள்ளிகளுக்கான இலவச பொருட்கள் வழங்கும் திட்டத்திற்க்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதா? மிதிவண்டிகள் மடிக்கணினிகள் எப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற கேள்விகள் எழுந்தன.

இன்றும், நாளையும் வறண்ட வானிலையே காணப்படும்!!

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் கொரோனா போர்வெல் காரணமாக 9 மாணவர்களுக்கு மட்டுமே இலவச மிதிவண்டி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இனிவரும் நாட்களில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் மிதிவண்டி வழங்கப்படவுள்ளது. பள்ளிகளில் இருந்து அறிவுப்பு வெளியானவுடன் மாணவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று இலவச மிதிவண்டியை பெற்றுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here