தமிழக மலைவாழ் பகுதி மக்களுக்கு குட் நியூஸ்.., முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இலவச பேருந்து பயண திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்பட்டாலும் மலைவாழ் மக்களுக்கு இலவச பயண திட்டம் குறித்த இந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மலைவாழ் பகுதிகளிலும் இலவச பயண இலவச பேருந்து பயணத்தை அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது இனி மலை பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை விரிவு படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் அதேபோல் நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்ற திருநங்கையரும் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here