யாரை தான் நம்புறது?? குழப்பமா இருக்கா.! அப்போ இத படிங்க.!

0

இன்று மக்களிடையே யாரை நம்பலாம் யாரை நம்ப கூடாது என்ற கேள்வி அதிகமாகவே இருக்கிறது. இது ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது. மேலும் இதற்கு சில வழிமுறைகள் உள்ளன.

முக்கியமானவை

முதலில் நாம் புதிதாக பழகும் நபர்கள் நடை, உடை போன்றவற்றை வைத்து அவர்கள் இப்படி தான் என்று மதிப்பிடாதீர்கள். பின்பு இந்த உலகத்தில் யாருமே Perfect கிடையாது என்பதை உணருங்கள். யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் நம் நம்பிக்கை முறிக்கலாம். ஒருவரை முழுவதுமாக நம்பி விடவும் கூடாது. ஒருவருடன் நாம் எந்த அளவிற்கு பயணிக்க முடியும் என்பதையே சிந்திக்க வேண்டும்.

நம்பிக்கையின் நான்கு நிலைகள்

நம்பிக்கையின் நிலை என்பது எந்த மாதிரியான விஷயங்களை நாம் ஒருவரிடம் பகிர்கிறோம் என்பது தான். முதல் நிலையில் நாம் சாதாரண விஷயங்களை பகிர்வதை குறிப்பிடுகிறது. அதாவது எல்லாரிடமும் பொதுவாக சொல்ல கூடியது (எ.கா. நேற்று நான் படத்திற்கு சென்றேன். நன்றாக இருந்தது).

இரெண்டாவது நிலை எப்படி என்றால் நம் வேலைக்கு செல்லும் இடத்திற்கு தேவையான தகவலை பகிர்வது. இது நம்முடன் பணிபுரியும் சகா ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு விஷயம் தான். இது இரண்டாவது வகையான நம்பிக்கை ஆகும்.

மூன்றாவது நிலை என்பது நம் குணநலன்களை அவர்களிடம் பகிர்வது. அதாவது நம் கோவம், அழுகை, கஷ்டம் போன்றவற்றை ஒருவருடன் பகிர்வது. இது மூன்றாவது கட்ட நம்பிக்கை ஆகும்

நான்காவது நிலையில் நம்மை பற்றிய தகவலை பகிர்வது அதவாது நாம்மை பற்றிய ரகசியங்கள் ஒருவரிடம் பகிர்வது. இதில் தான் நாம் தவறு செய்கிறோம். அந்த ரகசியத்தை அவர்கள் எப்படி பாதுகாப்பார் என்று நம்புவது. ஏனெனில் நாமே அதில் Perfect கிடையாது. அதனால் மற்றவரையும் நம்புவது நம் முட்டாள் தனம்.

அடுத்ததாக அவர்கள் மற்றவர்களுக்கு என்ன செய்கிறார்கள் என்று கவனியுங்கள். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுகிறார்களா என்று கவனியுங்கள். பிறகு அவரை பற்றி முடிவு செய்யுங்கள். இதன் பிறகு ஒருவரை நீங்கள் மதிப்பிடுங்கள். ஏனெனில் எவ்வளவு தூரம் ஒருவரிடம் பழகிய பிறகு நம் மனதிற்கு அவரை பற்றிய ஒரு எண்ணம் தோன்ற ஆரம்பிக்கும்.

இது அவர்களை பார்த்ததால் ஏற்பட்ட எண்ணம் கிடையாது அவர்களுடன் பழகியதால் ஏற்பட்ட எண்ணங்கள். இப்பொழுது வரும் இந்த எண்ணங்கள் தெளிவானவை. ஆனால் எப்பொழுதுமே மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று யாருமே Perfect கிடையாது நாம் உட்பட.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here