பிரபல கால்பந்தாட்ட வீரர் “டீகோ மாரடோனா” மாராடைப்பால் உயிரிழப்பு – சோகத்தில் ரசிகர்கள்!!

0

அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான டீகோ மாரடோனா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவையொட்டி அர்ஜென்டினாவில் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கால்பந்தாட்ட வீரர் டீகோ மாரடோனா:

பிரபல கால்பந்தாட்ட வீரரான டீகோ மாரடோனா மாரடைப்பால் உயிரிழந்தார். உலகம் முழுவதும் பல ரசிகர்களை கொண்ட டீகோ மாரடோனா கடந்த சில நாட்களுக்கு முன்பு மூளை அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு நவம்பர் 11-ம் தேதி மூளை அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இருப்பினும், உடல்நிலை தொடர்ந்து சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இருந்து பிரபல செலிவியர் ஒருவர் மாரடோனா வீட்டில் இருந்தே அவரை கவனித்து கொண்டுருந்தார். தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு முதலுதவி அளிப்பதற்குள் மாரடோனா உயிர் பிரிந்தது. 1960- ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் நாள் பிறந்தார். தற்பொழுது வயது 60.

மாரடோனாவுடன் பிறந்த சகோதரர்கள் ஹீகோ மற்றும் எட்வர்டோ இருவரும் பிரபலமான கால்பந்தாட்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரடோனா 1977 முதல் 1994 வரை சர்வதேச கால்பந்தாட்ட அணியில் தனது வேகம் மற்றும் வீரத்தை வெளிப்படுத்தி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகன் ஆவார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்று மேலும் உலகிற்கு பெருமையை சேர்த்தவர் மாரடோனா. இந்நிலையில் தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவரது உயிர் பிரிந்தது. மாரடோனா கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி தனது கடைசி பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவை அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here