கோல் மழையில் நனையும் கத்தார்…, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் அசத்தல் வெற்றி!!

0
கோல் மழையில் நனையும் கத்தார்..., இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் அசத்தல் வெற்றி!!
கோல் மழையில் நனையும் கத்தார்..., இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் அசத்தல் வெற்றி!!

FIFA உலக கோப்பை கால்பந்து தொடரில், எதிரணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் நெதர்லாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது.

FIFA உலக கோப்பை:

FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் 22 வது சீசன் கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின், 2ம் நாளான நேற்று, இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல் போட்டியில், குரூப் B யில் இடம்பெற்றுள்ள ஈரான் அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி மோதியது. இந்த போட்டியில், இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே கோல் மழையை பொழிய தொடங்கினர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், முதல் பாதியில், இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து தொடங்கிய, ஆட்டத்தின் 2வது பாதியில், ஈரானின் மெஹ்தி தரேமி ஒரு கோல் அடிக்க, பதிலுக்கு இங்கிலாந்து வீரர்கள் 4 கோல்கள் அடித்து அசைக்க முடியாத முன்னிலை பெற்றனர். இறுதி நேரத்திலும் ஈரானின் மெஹ்தி தரேமி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம், 6-2 என்ற கோல் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் ஈரான் தோல்வியை சந்தித்தது.

புரோ கபடி: அதிரடி ஆட்டத்தால் மாஸ் காட்டிய தமிழ் தலைவாஸ்…, வீழ்ந்த பெங்கால் வாரியர்ஸ்!!

இதே போன்று மற்றொரு ஆட்டத்தில், குரூப் A யில் உள்ள செனகல் அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி மோதியது. இந்த போட்டியின், முதல் பாதியில், இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், 2வது பாதியில், நெதர்லாந்தின் கோடி காக்போ மற்றும் டேவி கிளாசென் 2 கோல்களை அடித்து அசத்தினர். இதனால், நெதர்லாந்து அணி, 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் செனகல் அணியை வீழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here