வேலையில்லா VIPகளுக்கு இந்த முறை 100% வேலை உறுதி., அரசின் 3 மாஸ்டர் பிளான்! விவரம் உள்ளே!!

0
வேலையில்லா VIPகளுக்கு இந்த முறை 100% வேலை உறுதி., அரசின் 3 மாஸ்டர் பிளான்! விவரம் உள்ளே!!
வேலையில்லா VIPகளுக்கு இந்த முறை 100% வேலை உறுதி., அரசின் 3 மாஸ்டர் பிளான்! விவரம் உள்ளே!!

மாநிலம் முழுவதும் புதிய தொழிற்சாலைகளை தொடங்கி, இந்த முறை படித்த வேலையில்லா இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க அரசு 3 முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது.

அரசின் திட்டம்:

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்பு கடந்த 2 ஆண்டுகளாக, தொழில் துறையில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்கள் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, வருவாயை பெருக்க திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் புதுவையில், புதிதாக தொழில் தொடங்குவோருக்கு ஏகப்பட்ட சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், ஏற்பட்ட நஷ்டங்களால் பலர், இந்த முடிவை கைவிட்டனர். தற்போது புதுவை அரசு தீவிரமாக பரிசீலித்து 3 முக்கிய பிளான்களை போட்டு வைத்துள்ளது. புதிதாக தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தில் ரூ.50 பைசா வரை மானியம் அளிக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல் மாநில ஜிஎஸ்டி பங்களிப்பு தொகையின் குறிப்பிட்ட சதவீதத்தை தொழிற்சாலைகளுக்கு திருப்பி தர உள்ளதாகவும், தொழிற்சாலைகளுக்கான முத்திரைத்தாள் தீர்வு கட்டணத்தை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்திய பின்பு அரசு அதனை திருப்பி தருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(22.11.2022) – முழு விவரம் உள்ளே!!

வரும் டிசம்பர் 1ஆம் தேதி அரசின் சார்பாக நடக்கும் இந்த கூட்டத்தில், புதிய தொழிற்சாலைகள் தொடங்கி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவது குறித்த முக்கிய முடிவுகள் எட்ட படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here