ஜனவரி 1 முதல் நான்கு சக்கர வாகனங்களுக்கு ‘பாஸ்டேக்’ கட்டாயம் – போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு!!

0

2021 ஜனவரி 1 முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக்குகளை கட்டாயமாக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, நான்கு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஃபாஸ்ட் டேக்குகளை நிறுவுதல் மற்றும் வாகனங்களை பதிவு செய்வது ஆகியவற்றை மத்திய அமைச்சகம் கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தது. டிசம்பர் 1, 2017 முதல் இந்த நடவடிக்கை நடைமுறையில் உள்ளது. இந்த விதிமுறையின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம், 2021 ஏப்ரல் 1 முதல் வாகன உரிமையாளர்கள் காப்பீடுகளை பெறுவதற்கும் பாஸ்டேக் வைத்திருப்பதை கட்டாயமாக்கியது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் வாகன செயல்பாட்டுக்கு பயிற்சி திறன் சான்றிதழ்கள் தேவைப்பட்டால், அவற்றை பெறுவதற்கும் ஃபாஸ்டேக்குகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஃபாஸ்டேக்குகள் மூலம் டோல் நிலையங்களில் வாகனங்கள் சீராக போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியும். மேலும் நேரமும் மிச்சமாகும். இதன் மூலம் வாகன ஒட்டிக்கும், சுங்கச்சாவடி பணியாளருக்கும் இடையேயான நேரடி தொடர்பு தவிர்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என்கிற விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here