ஒரே நாளில் 50 லட்சம் பாஸ்டேக் பதிவு, ரூ.80 கோடி வசூல் – மத்திய அமைச்சகம் தகவல்!!

0

டோல்கேட்டுகளில் பயன்படுத்தப்படும் பாஸ்ட்டேக் வசூல் ஒரே நாளில் 80 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டோல்கேட்டுகளில் காத்திருக்கும் நேரம் மற்றும் எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் டோல்கேட்டுகளில் அவ்வபோது கட்டணம் கட்டாமல் மொத்தமாக பணம் கட்டி பாஸ்டேக்குகளை வாங்கிக் கொள்ளலாம். ஸ்டிக்கர்களை வாகனங்களின் முன்புறம் ஒட்டிக் கொள்வதன் மூலம் டோல்கேட்டுகளில் டிஜிட்டல் ரீடிங் விரைவாக செய்யப்பட்டு தாமதமின்றி கடந்து செல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வரும் 2021 ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்டேக்குகள் கட்டாயம் என சொல்லப்படும் நிலையில், இதுவரையில் நாடு முழுவதும் 2.20 கோடி பாஸ்ட்டாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் உபயோகம் விரைவாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக கடந்த 24ம் தேதி பாஸ்டேக் பரிவர்த்தனை வரலாற்றில் இல்லாத அளவு அதிகரித்து 50 லட்சத்தை கடந்தது. வசூல் தொகை 80 கோடியாக இருந்தது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

புதிய வகை கொரோனா பாதிப்பிற்கான 7 அறிகுறிகள் – சுகாதாரத்துறை வெளியீடு!!

மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மின்னணு கட்டண பரிமாற்றத்திற்காக, சமீபத்தில் மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாஸ்டேக்குகள் இந்திய தேசிய ஆணையத்தின் சுங்கச்சாவடி மையங்களிலும் மேலும் 30,000 விற்பனை மையங்களிலும் கிடைக்கிறது.

இந்த திட்டத்திற்காக மொத்தம் 27 வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இதை எளிமையாக ரீசார்ஜ் செய்வதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.மேலும் ஸ்நாப்டீல், அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றிலிருந்து ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். தவிர சுங்கச்சாவடிகள் மற்றும் விற்பனை மையங்களிலும் பணம் செலுத்தி பாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here