புதிய வகை கொரோனா பாதிப்பிற்கான 7 அறிகுறிகள் – சுகாதாரத்துறை வெளியீடு!!

0
corona virus
corona virus

தற்போது இங்கிலாந்தில் உருமாறிய புது வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது அதற்கான 7 அறிகுறிகளை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

உருமாறிய கொரோனா:

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் இருந்து கொரோனா என்னும் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பறித்துள்ளது. இன்னும் அதற்கான தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் முழுவதுமாக மீளவில்லை. ஆனால் அதற்குள் மேலும் ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாதாரணமாகவே வைரஸ் என்றால் உருமாறும் ஆற்றல் பெற்றது தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அதேபோல் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாறி புது விதமான வைரஸாக பரவி வருகிறது. இதனால் தற்போது இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது இங்கிலாந்தில் காணப்படும் இந்த வைரஸ் வி.யு.ஐ. 202012/01 மற்றும் பி 1.1.7 என்று அழைக்கப்படுகிறது.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் 70 சதவீதம் வீரியம் அதிகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புது வகை கொரோனா வைரசால் உயிர் பலி அதிகமாக ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. முந்தய கொரோனா வைரஸின் அறிகுறியாக கூறப்படுவது, காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் மற்றும் சுவைத்தன்மையின்மை போன்றவை தான்.

விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி உதவித்தொகை வழங்கும் திட்டம்!!

அந்த அறிகுறிகளுடன் சேர்த்து தற்போது இந்த புதிய வகை கொரோனாவின் அறிகுறிகளை இங்கிலாந்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், சோர்வுத்தன்மை, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனஉளைச்சல், தசை வலி, மற்றும் தோல் அரிப்பு போன்றவையாம். ஆதலால் இந்த 7 அறிகுறிகள் இருந்தால் உடனே சென்று பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ள்ளது. மேலும் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் அனைவரும் தாமாகவே பரிசோதனைக்கு வரவேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here