“தோனி, விராட் போல என்னால் கேப்டனாக இருக்க முடியாது”…, டு பிளெசிஸ் பளிச் பேட்டி!!

0
"தோனி, விராட் போல என்னால் கேப்டனாக இருக்க முடியாது"..., டு பிளெசிஸ் பளிச் பேட்டி!!

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு மத்தியில், RCB அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், தோனி மற்றும் விராட் கோலி குறித்து மனம் திறந்து உள்ளார்.

ஐபிஎல்:

தற்போது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் செயல்பட்டு வருகிறார். இவர், கடந்த 2011-2015, 2018-2021 என நீண்ட கால இடைவெளியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். இவர், இந்திய அணியின் இரு ஜாம்பவான்களான தோனி மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ள அணியில் விளையாடி அனுபவம் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, முதலில் ஃபாஃப் டு பிளெசிஸ் CSK அணியில் இடம் பெற்ற போது சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க பெற்றது இல்லை என கூறியுள்ளார். ஆனால், எனக்கு தலைமை சிறந்த கேப்டனான தோனியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டிய நேரமாக மாறியது என்று மனம் திறந்துள்ளார். இதிலிருந்து, எப்படி அமைதியாகவும் மற்ற வீரர்களிடம் தெளிவான முடிவை எடுப்பது என்றும் தோனியிடம் கற்றுக் கொண்டுள்ளதாக ஃபாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.

எல்லையை மீறி கொளுத்தும் கோடை வெப்பம்.., மொத்த காரணமும் இதுதான்.., வானிலை ஆய்வு வல்லுநர் விளக்கம்!!!

மேலும், எப்போதும் தங்களிடம் உள்ள சிறந்ததை எடுத்து முன்னேறுங்கள் என்று தோனி கூறுவார். இதனாலேயே அவர் கேப்டன் கூல்லாக மாறி விட்டார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க வீரரான இவர், கிரேம் ஸ்மித், ஸ்டீபன் ஃப்ளெமிங், தோனி மற்றும் விராட் கோலி இவர்களை போன்ற கேப்டன்களாக என்னால் கண்டிப்பாக இருக்கவே முடியாது எனவும் தெரிவித்துள்ளார். RCB அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில், 12 போட்டிகளில் விளையாடி தலா 6ல் வெற்றி மற்றும் தோல்வி அடைந்து 12 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here