தாலிபான்களுக்கு பேஸ்புக் வைத்த ஆப்பு.. நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

0

தாலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானின் மொத்த ஆட்சி அதிகாரத்தையும் தன் வசம் தாலிபான்கள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அனைத்து உலக நாடுகளின் கவனமும் ஆப்கானிஸ்தான் மேல் தான் உள்ளது.

சீனாவும், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு கொள்ள முன்வந்து உள்ளனர். இந்தியாவும் தங்கள் தூதரக அதிகாரகளை மீட்பதில் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்றும் இன்றும் மட்டும் 200க்கும் அதிகமான இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தாலிபான்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம் தலீபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக பதிவிடுவோர் கணக்குகளை முடக்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here