நம்ம வீட்டு பொண்ணு ப்ரோமோ- ஆரம்பத்திலேயே முட்டி கொள்ளும் நாயகன், நாயகி.. இனி தரமான சம்பவம் இருக்கு!!!

0

விஜய் டிவியில் ஒரு சீரியல் முடிய முடிய அடுத்த அடுத்து சீரியலை இறக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியலை நேற்று அதாவது ஆகஸ்ட்  16 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது அந்த சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நம்ம வீட்டு பொண்ணு

குடும்பத்தின் மீது மிகவும் பாசம் காட்டி வருகிறார் கதாநாயகன் கார்த்திக். அவரை ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும் கதாநாயகி மீனாட்சி இப்படிப்பட்ட ஒருவரை மட்டும் எப்பொழுதும் திருமணம் செய்ய மாட்டேன் என தனது தோழியிடம் கூறுகிறார். இப்படியாக கடந்த சில நாட்களாக ப்ரோமோ வெளியாகி வந்தது.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் ரோட்டின் ஓரத்தில் நின்று பேசு கொண்டிருக்கும் கார்த்திக் மீது வேகமாக கார் ஓட்டி வரும் மீனாட்சி சேற்றை வாரி அடிக்கிறார்.இதனால் கோபமாகும் கார்த்திக் அவரை திட்ட, பதிலுக்கு மீனாட்சி  தப்பை உங்கள் மீது வைத்து கொண்டு என்னை ஏன் திட்டுகிறார்கள் என திமிராக பேசி கொண்டு செல்கிறார்.

இதையடுத்து மீண்டும் ஒரு துணி கடையில் சந்திக்கின்றனர். இருவரும்  துணி வாங்கி கொண்டு பில் கவுண்டரில் இருக்கும் போது, போன் பேசி கொண்டே வந்த மீனாட்சி, தனது பார்சலுக்கு பதிலாக கார்த்திக் பார்சலை எடுத்து செல்கிறார். இதனை அறிந்து பின்தொடர்ந்த கார்த்திக் தன்னுடைய பார்சலை எடுத்துவிட்டு வந்துவிட்டதாக கூற, தேவை என்றே பார்சலை மாத்தி வைத்ததாகவும், இதையே சாக்காக வைத்து கொண்டு காதல் செய்வதாக கூற வேண்டியது என கண்டபடி பேசுகிறார்.

இதற்கு கார்த்தி சிரித்து கொண்டு உன்னை மாதிரி ஒரு பொண்ண லவ் பண்ணுகிற முட்டாள் தனமான செயலை யாரும் செய்ய மாட்டார்கள் என கூறி கொண்டு தனது துணி பார்சலை வாங்கி கொண்டு புறப்படுகிறார். இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிவுற்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here