ஜியோவுடன் பேஸ்புக் திடீர் ஒப்பந்தம் – இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பல்லாயிரம் கோடி முதலீடு..!

0

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை 5.7 பில்லியன் டாலருக்கு ரூ. 43,574 கோடி பேஸ்புக் வாங்கியுள்ளது இந்த ஒப்பந்தத்தால் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு 65.95 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ஜியோ – பேஸ்புக் ஒப்பந்தம்..!

ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை 43,574 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்புக் நிறுவனம். ஜியோவின் இந்த விற்பனை நடவடிக்கைகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் RIL இன் கடன் சுமையை குறைக்க உதவும்.

RIL விளக்கம்..!

இந்த ஒப்பந்தம் குறித்தது RIL கூறுகையில், இது உலகில் எங்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தால் சிறுபான்மை பங்குகளுக்கான மிகப்பெரிய முதலீடு என்றும் இந்தியாவில் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு என்றும் கூறியுள்ளது.

வர்த்தக சேவைகளை அறிமுகப்படுத்திய மூன்றரை ஆண்டுகளில் சந்தை மூலதனத்தால் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட டாப் 5 நிறுவனங்களில் ஜியோவும் ஒன்று என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் ஜியோக்கு பாராட்டு..!

இந்த ஒப்பந்தம் இந்தியாவில் ஜியோவால் தூண்டப்பட்ட வியத்தகு மாற்றத்தால் ஏற்பட்ட எங்கள் உற்சாகத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நான்கு ஆண்டுகளுக்குள், ஜியோ 388 மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஆன்லைனில் கொண்டு வந்துள்ளது, இது புதுமையான புதிய நிறுவனங்களை உருவாக்கத் தூண்டுகிறது.

புதிய வழிகளில் மக்களை இணைக்கிறது. இந்தியாவில் அதிகமானவர்களை ஜியோவுடன் இணைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்தியாவில் அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். அதிலும் குறிப்பாக இந்தியா முழுவதும் 60 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது எங்கள் இலக்கு என்று தெரிவித்துள்ளது.

குறுகிய காலத்தில் அம்பானி அதிரடி..!

முகேஷ் அம்பானி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஜியோ நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக மிக குறுகிய காலத்தில் அதிவேகமாக வளர்ந்துள்ளது. பல புதுமையான முயற்சிகள் மூலம் ஜியோ நிறுவனம் சுமார் 340 மில்லியன் வாடிக்கையாளர்களை இந்தியாவில் கொண்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here