தமிழக தனியார் பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு இறுதி காலக்கெடு., விரைந்து இதனை முடிக்க அறிவுறுத்தல்!!

0
தமிழக தனியார் பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு இறுதி காலக்கெடு., விரைந்து இதனை முடிக்க அறிவுறுத்தல்!!
தமிழக தனியார் பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு இறுதி காலக்கெடு., விரைந்து இதனை முடிக்க அறிவுறுத்தல்!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமாக கலை, அறிவியல், நர்சிங் உள்ளிட்ட பல்வேறு விதமான கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இவற்றில் நகர்ப்புற எல்லைக்குள் அமைந்துள்ள சில கல்வி நிறுவன கட்டிடங்கள் அரசின் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் கடந்த 2011 ம் ஆண்டுக்கு முன்னதாக கட்டப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு உரிய அனுமதி வழங்குவதற்கான வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தி இருந்தது. அதன்படி கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் இந்த அவகாசத்திற்கான கால அவகாசம் முடிவுற்றது. ஆனாலும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க தவறி விட்டனர். இதன் காரணமாக இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக நகர ஊரமைப்பு இயக்கம் மேலும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

உங்க whatsappல் யூஸ் ஆகாத குரூப் இருக்கா? கவலைய விடுங்க, இனி எல்லாம் அதுவா Delete ஆயிடும்!!

அதன்படி அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் வருகிற ஜூன் 30ம் தேதிக்குள் வலைத்தளத்தில் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் உரிய ஆவணங்களை நகர ஊரமைப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here