நான் விவாகரத்து செய்ய இது தான் காரணம்.., ஓப்பனாக பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா!!

0
நான் விவாகரத்து செய்ய இது தான் காரணம்.., ஓப்பனாக பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹரிப்பிரியா. இந்த சீரியலில் இவரது நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தன் பேச்சால் மக்களை சுண்டி இழுக்கிறார். இப்படி சீரியலில் படு பிஸியாக இருக்கும் ஹரிப்பிரியாவின் ரியல் வாழ்க்கையில் பல கஷ்டமான விஷயங்கள் உள்ளது என்றே சொல்லலாம். அதாவது இவர் நடிகர் விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்ற பிரிந்து வாழ்கின்றனர். இத்தனை நாள் இந்த விவாகரத்து பற்றி எதுவும் சொல்லாத ஹரிப்ரியா இப்போது சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது வாழ்க்கையில் கசப்பான மனிதர்களை சந்திக்கும் சூழல் வரும். பிடிக்காத உறவு கூட அமையலாம். அதை தாண்டி நாம் தான் கடந்து வர வேண்டும். அந்த நேரத்தில் நாம் மிகுந்த மன தைரியத்தோடு இருக்க வேண்டும் என மறைமுகமாக தனது விவாகரத்து பிரச்சனையை பற்றி பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here