கடத்தப்பட்ட தர்ஷினி., ஈஸ்வரி செய்த ஷாக்கிங்கான செயல்., என்னடா நடக்குது இங்க!!!

0

சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல். சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை மையமாக வைத்து இந்த சீரியலின் கதைக்களம் அமைந்துள்ளது. அதன்படி இதில் ஈஸ்வரியின் மகள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதனால் அவரை தேடி கண்டுபிடிக்கும்  வேலையில் சேகரனின் குடும்ப பெண்கள், ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த வீட்டு மருமகள்கள் ஒவ்வொரு நாளும் சவாலான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர்.

இதையடுத்து ஈஸ்வரியின் மகள் இருக்கும் இடத்தை ஒருவழியாக நெருங்கிவிட்டனர். இப்படி அனல்பறக்கும் கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கனிகா பொதுவாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது சுற்றுலா சென்று மார்டன்  உடை அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்த பிக்கை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், மகள் தொலைந்து போன வருத்தம் இல்லாமல்  இப்படி ஜாலியா என்ஜோய் பன்றாங்களே  என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here