
எதிர்நீச்சல் சீரியல் இப்போது எதிர்பார்க்காத எக்கச்ச்சக்க ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தன நாள் வீட்டில் உள்ளவர்களை அடக்கி வைத்த குணசேகரனுக்கு இப்போது அடிமேல் அடி விழுந்து வருகிறது. எப்போது குணசேகரனின் ஒட்டுமொத்த ஆட்டத்துக்கு முடிவு கிடைக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறேன்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து இப்போது வரை கொஞ்சம் கூட சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் இல்லத்தரசிகளை கவர்ந்து வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சீரியலில் நடிக்கும் ஒருவர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது குணசேகரனின் ஆணவ செயலை எதிர்த்து ஜனனிக்கு ஆதரவாக இருக்கும் தோழி வசு என்ற வைஷ்ணவி குறித்து தான்.
பாக்யாவுக்கு ஹீரோ ரஞ்சித் தான்.., உண்மையை உளறிய கோபி.., வீடியோ உள்ளே!!
இவர் நேற்று தனது நண்பர்களுடன் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்கும் மதுமிதாவும் கலந்து கொண்டார். அப்போது வைஷ்ணவி வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ‘ஸ்ரீநி தினேஷ்’ என்பவரை காதலிப்பதாக அறிவித்தார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வந்த நிலையில் தற்போது இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.