“எருமசாணி” ஹாரிஜாவிற்கு ஆண் குழந்தை – குவியும் வாழ்த்துக்கள்!!

0

சமூகவலைத்தளமான யூடியூப் தொடரான “எருமசாணி” மூலமாக பிரபலமான ஹாரிஜாவிருக்குழந்தை பிறந்து விட்டது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

யூடியூப் தொடர்

இணையத்தளத்தில் பலர் தங்களது திறமையினை காட்டி பலரையும் கவர்ந்து வந்துள்ளனர். அந்த வகையில் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான “எருமசாணி” தொடரின் மூலமாக பிரபலமானவர் தான், ஹாரிஜா. இவை அனைத்து விதமான இணைய தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதன் மூலமாக தனக்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தினை பிடித்தார். இப்படியாக இருக்க திரைத்துறையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

மித்தாலி ராஜ் 10 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை – குவியும் பாராட்டுக்கள்!!

முன்னணி நடிகர்களுடன் சில படங்களில் நடித்தார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் மிஸ்டர் லோக்கல் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பார். தனது குறும்பான மற்றும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்தார். இவர் “எருமசாணி” தொடரில் நடித்த போது அவருக்கு ஜோடியாக நடித்த விஜய் இவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததாக அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு தனது சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்ட ஹாரிஜா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அமர் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம் கர்ப்பமாக இருந்ததை உறுதி செய்த ஹாரிஜா, தற்போது தனது ஒரு ஆண் குழந்தை பிறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here