PF கணக்கின் Profile-ஐ திருத்தம் செய்யணுமா? இந்த ஆவணங்கள் தேவை? விவரம் உள்ளே…

0
PF கணக்கின் Profile-ஐ திருத்தம் செய்யணுமா? இந்த ஆவணங்கள் தேவை? விவரம் உள்ளே...

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு கால நலன் கருதி, அவர்களின் மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த கணக்கு தொடர்பான விவரங்களை, ஊழியர்கள் எளிதாக கையாளும் வகையில் பல்வேறு அப்டேட்களையும் அவ்வப்போது EPFO நிறுவனம் அறிவித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ஊழியர்கள், தங்களது UAN Profile-ஐ, அவர்களே புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி ஆதார், பான் கார்டு, திருமண நிலை உள்ளிட்ட விவரங்களை திருத்திக் கொள்ளலாம். அதேபோல் இந்த புதுப்பித்தலுக்கு தேவையான ஆவணங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

சில்லறை பணவீக்கம் குறித்த மாஸ் அப்டேட்., ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

அதன் விவரம் பின்வருமாறு:

  • பிறந்த தேதியில் திருத்தம் செய்ய குடியிருப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று.
  • பெயர் மற்றும் பாலின விவரங்களில் மாற்றம் செய்ய ஆதார் (கட்டாயமானது), பாஸ்போர்ட், பிறப்பு (அ) இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை.
  • தாய் / தந்தை பெயர் மற்றும் உறவுமுறையில் மாற்றம் செய்ய புகைப்பட சான்றிதழ், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.
  • திருமண நிலையை புதுப்பித்துக்கொள்ள பாஸ்போர்ட்,, விவாகரத்து ஆணை உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும் என அறிவுறுத்தி உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here