இங்கிலாந்தில் வேகமெடுக்கும் இந்தியாவின் உருமாறிய கொரோனா – பிரதமர் அதிர்ச்சி தகவல்!!

0
இங்கிலாந்தில் வேகமெடுக்கும் இந்தியாவின் உருமாறிய கொரோனா - பிரதமர் அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் தற்போது பி1. 617.2 என்னும் உருமாறிய கொரோனா நோய்த்தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த உருமாறிய கொரோனா தொற்றின் தாக்கம் இங்கிலாந்து நாட்டிலும் அதிகமாக காணப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உருமாறிய கொரோனா:

சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. பொதுவாக வைரஸ் என்றால் உருமாறும் ஆற்றலை கொண்டது. தற்போது அந்த வகையில் கொரோனா நோய்த்தொற்றும் அனைத்து உலக நாடுகளிலும் பல வகையாக உருமாறி அதிவேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று உருமாறி பி1. 617.2 என்னும் வகையாக பரவி வருகிறது. இந்த வகையான கொரோனா முந்தைய கொரோனா வைரஸை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பி1. 617.2 வகை வைரஸ் இந்தியா மட்டுமல்லாமல் 20 உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் உருமாறிய கொரோனா இங்கிலாந்து நாட்டில் அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உருமாறிய கொரோனா:
உருமாறிய கொரோனா:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் கடந்த வாரம் உருமாறிய கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பு 520 ஆக இருந்த நிலையில் தற்போது 1313 ஆக அதிகரித்துள்ளது.தற்போது இதுகுறித்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு வேதனையளிக்கிறது. இங்கிலாந்தில் வருகிற ஜூலை மாதம்  21ம் தேதி முதல் தளர்வுகளை அளிக்க திட்டமிடப்பட்டது. தற்போது உருமாறிய கொரோனா ஏற்படும் தாக்கத்தினால் இந்த தளர்வுகள் அளிப்பது தாமதமாகலாம் என்று தெரிவித்தார். இந்த தகவல் நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here