2 வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபாரம்..!

0

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி..!

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. முதல் இன்னிங்சில் அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 176 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. 3வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது.4-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 287 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிராத்வைட் (75), ப்ரூக்ஸ் (68), ராஸ்டன் சேஸ் (51) ஆகியோர் அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் பிராட் மற்றும் கிரிஷ் ஒக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி வெற்றி..!

இதையடுத்து, 182 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் களமிறங்கினர். பட்லர் ரென் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் வந்த சக் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து ரூட் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

219 ரன்கள் முன்னிலையுடன் டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு அணியின் ஸ்கோர் 129 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது இங்கிலாந்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஸ்டோக்ஸ் 57 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உள்பட 78 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரரை அனுப்பிய ஐக்கிய அரபு அமீரகம்!!

இதையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து சமன் செய்துள்ளது. 3வது டெஸ்ட் போட்டி இதே மான்செஸ்ட்ர் மைதானத்தில் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here