T20 WC 2022 SL vs ENG: ஆவலோடு காத்திருக்கும் ஆஸ்திரேலியா…, அரையிறுதிக்குள் நுழைய போவது யார்??

0
T20 WC 2022 SL vs ENG: ஆவலோடு காத்திருக்கும் ஆஸ்திரேலியா..., அரையிறுதிக்குள் நுழைய போவது யார்??

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடக்கும் நிலையில், அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ஆஸ்திரேலிய அணி காத்துக்கொண்டிருக்கிறது.

டி20 உலக கோப்பை:

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. இந்த சுற்றானது, குரூப் 1 மற்றும் குரூப் 2 பிரிவுகளின் கீழ் தலா 6 அணிகளாக வகுக்கப்பட்டு லீக் சுற்றுகள் போல் நடைபெற்று வருகின்றன. இதில், குரூப் 1ல் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் 3 ல் வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் அதிகபட்சமாக +2.113 ரன் ரேட் வைத்து அரையிறுதிக்கு முன்னேறியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளை பெற்றிருந்தாலும், -0.173 சராசரியுடன் அரையிறுதி வாய்ப்புக்காக, மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது, இன்று இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி மோத உள்ளது. இந்த போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற்றால் 6 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடிக்கும்.

இதன் விளைவால், 2வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும். மாறாக, இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி வென்றால், 7 புள்ளிகள் மற்றும் அதிகபட்ச சராசரியுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதனால், இன்றைய போட்டியின் முடிவில், குரூப் 1ல் எந்த இரு அணிகள் அரையிறுதிக்குள் நுழையும் என்பது தெளிவாக தெரிந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here