தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – நீட் தேர்வுக்காக அரசின் அதிரடி ஆக்சன்! பெற்றோர் குஷி!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் - நீட் தேர்வுக்காக அரசின் அதிரடி ஆக்சன்! பெற்றோர் குஷி!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் - நீட் தேர்வுக்காக அரசின் அதிரடி ஆக்சன்! பெற்றோர் குஷி!!

தமிழகத்தில், மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வதற்காக, இந்த ஆண்டு அதிரடி நடவடிக்கையை கல்வித்துறை எடுத்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கல்வித்துறை அதிரடி:

மத்திய அரசு மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வான, நீட் தேர்வை கொண்டு வந்தது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இதை எதிர்த்தாலும், மத்திய அரசால் தொடர்ந்து இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவர்களை இந்த நீட் தேர்வுக்கு தயார் செய்யும் நடவடிக்கைகளில், தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, நீட் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்காக 412 இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, இதுவரை இல்லாத வகையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த நீட் தேர்வு பயிற்சியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதாவது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் 3வது சனிக்கிழமையில் இருந்து, ஒவ்வொரு வாரமும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(05.11.2022)-முழு விவரம் உள்ளே!

இதில் சேர விரும்பும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை, அவர்களின் 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 50 நபர்களையும், 11ஆம் வகுப்பு மாணவர்களை, 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 20 நபர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால், இந்த கல்வி ஆண்டில், நீட் தேர்வில் அதிகபட்ச தேர்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here