ட்விட்டரில் 50% ஊழியர் குறைப்பு நடவடிக்கை தொடக்கம்., பல இந்தியர்கள் பணி நீக்கம் – எலான் மஸ்க் அதிரடி!!

0
ட்விட்டரில் 50% ஊழியர் குறைப்பு நடவடிக்கை தொடக்கம்., பல இந்தியர்கள் பணி நீக்கம் - எலான் மஸ்க் அதிரடி!!
ட்விட்டரில் 50% ஊழியர் குறைப்பு நடவடிக்கை தொடக்கம்., பல இந்தியர்கள் பணி நீக்கம் - எலான் மஸ்க் அதிரடி!!

ட்விட்டரில் 50%, பணியாளர்கள் குறைப்புக்கான நடவடிக்கையை எலான் மஸ்க் அதிரடியாக தொடங்கியுள்ளார். இதனால் பல இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர்.

ஆள் குறைப்பு நடவடிக்கை:

ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை, முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் அண்மையில் கைப்பற்றினார். பதவியேற்றதும் ட்விட்டர் சிஇஓ உள்ளிட்ட பல அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தார். இதுபோக, ப்ளூ டிக் எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவரிடம் மாதம் 8 டாலர், அடுத்த டிசம்பர் மாதத்தில் இருந்து வசூல் செய்யப்படும் என அறிவித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ட்விட்டரை இவர் வாங்கியதும், பல ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும், 50% ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வார் என்றும் வல்லுநர்கள் எச்சரித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக, ட்விட்டர் நிறுவனத்தின் பல ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவரின் இந்த நடவடிக்கையால், நிறுவனத்தின் பொறியியல் மற்றும் தகவல் தொடர்பு அலுவலர், மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல பணிகளைச் சார்ந்த ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

வேலை தேடும் நபர்களே உஷார்., இதை நம்பி ஏமாறாதீங்க – தேசிய தகவல் மையம் எச்சரிக்கை!!

குறிப்பாக, பல இந்தியர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எலான் மஸ்கின் இந்த அதிரடியால், ட்விட்டர் நிறுவனத்தின் பல கிளைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் இந்த வலைதளத்தின் சேவை பெரும்பான்மையான இடங்களில் முடங்கியது. இதனை அடுத்து, எலான் மஸ்கின் அடுத்த நடவடிக்கை என்னவென்று தெரியாமல் பலரும் குழம்பிப் போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here