EMI வட்டிக்கு வட்டி ரத்து சலுகை – விவசாயிகள் பெற்ற பயிர், டிராக்டர் கடன்களுக்கு கிடையாது!!

0

ஊரடங்கு காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தொகைகளின் EMI வட்டிக்கு வட்டி வசூல் ரத்து சலுகை விவசாயிகள் பெற்ற பயிர் மற்றும் டிராக்டர் கடன்களுக்கு கிடையாது என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் மசோதா காரணமாக கொதிப்பில் உள்ள விவசாயிகள், இந்த அறிவிப்பால் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வட்டிக்கு வட்டி ரத்து:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தொழில் துறைகள் சரிந்து பலர் வேலை இழந்து உரிய வருமானம் இன்றி அவதிப்பட்டனர். அவர்களின் துயரத்தை போக்கும் வகையில் வங்கிகளில் 2 கோடி ரூபாய்க்கு கீழ் பெற்ற கடன் தொகைகளுக்கு மாதத்தவணை (EMI) செலுத்த 6 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் ஒத்திவைக்கப்பட்ட EMI தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படும் என வங்கிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

emi

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்தது. அதில், தள்ளிவைக்கப்ட்ட EMI தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உறுதி அளிக்கப்பட்டு பிராமணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கில் EMI வட்டிக்கு வட்டி வசூலித்த வங்கிகள், அப்பணத்தை வாடிக்கையாளரின் கணக்கில் நவம்பர் 5ம் தேதிக்குள் செலுத்துமாறு உத்தரவிட்டது ரிசர்வ் வங்கி.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் வட்டிக்கு வட்டி ரத்து நடைமுறை எந்தெந்த கடன் தொகைகளுக்கு பொருந்தும் என்ற தகவலை மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. சிறு, குறு தொழில் நிறுவன கடன், கல்விக் கடன்கள், வீட்டு கடன், வீட்டு உபயோக பொருட்கள் கடன், கிரெடிட் கார்டு நிலுவை, வாகன கடன், தனிநபர் கடன்,போன்றவற்றிற்கு மட்டுமே இந்த சலுகை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் பெற்ற டிராக்டர், பயிர் கடன்களுக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here