கேரளா ஸ்பெஷல் “வாழை இலை ஹல்வா” – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

0

இப்போ நாம பார்க்க போறது ரொம்பவே டேஸ்டியான பாக்கவே அழகா இருக்குற வாழை இலை ஹல்வா தாங்க. நம்ம ஊருல சுலபமா கிடைக்க கூடிய ஒன்னு தான். வாழை இலைனாலே ஸ்பெஷல் தான். வாழை இலையில சாப்பிட்டால் ஆயுசு கூடும்னு சொல்றாங்க அந்த வாழை இலையவே சமைச்சு சாப்பிட்டா எப்படி இருக்கும். வேண்டாம்னு தூக்கி போடுற வாழை இலையில இப்படி ஒரு டேஸ்ட்டானு தீபாவளிக்கு செஞ்சு அசத்தலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

  • வாழை இலை – 1
  • சோளமாவு – 1 கப்
  • சர்க்கரை – 1 கப்
  • முந்திரி – 50 கி
  • ஏலக்காய் – 4
  • வெள்ளரி விதை – 20 கி
  • நெய் – 200 கி
  • உப்பு – கால் டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் வாழை இலையை மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். மூண்று கப் வாழை இலை சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒரு கப் சோளமாவு, ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கரைக்கவும். அதன் பின் கெட்டியான கடாயில் நெய் விட்டு முந்திரியை பொண்ணிறமாக வறுத்து எடுத்துவிட்டு கரைத்த வாழை இலை, சோளமாவு கரைசலை ஊற்றி மெதுவாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

முக்கியமாக ஸ்டவ் மீடியமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பச்சை வாசனை நீங்கி ஹல்வா பதத்திற்கு வரும். இடை இடையே நெய்விட்டு கிளற வேண்டும். ஹல்வா பதத்திற்க்கு வந்தவுடன் ஏலக்காய், சிறிது உப்பு மற்றும் வறுத்து வைத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து இறக்க வேண்டும். பரிமாறுவதற்கு முன் வெள்ளரி விதைகளை தூவி பரிமாறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here