தமிழகத்தில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்., சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!!!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்., சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை, தேர்தல் பணியில் ஈடுபட மாநில அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வு முடிவடைய இருப்பதால், விடைத்தாள் திருத்தும் பணியுடன் தேர்தல் பணி கூடுதல் சுமையாக இருக்கும் என ஆசிரியர்கள் பலரும் கவலை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சென்னையில் நியமனம் செய்யப்பட்ட, சுமார் 1,500 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களிடம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

HOME WINS.. 9 போட்டிகள், 9 வெற்றிகள்.. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள்!!

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here