மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு.., பயண நேரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.., நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
நாடு முழுவதும் பல பகுதிகளில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு பயனுள்ள ஒன்றாக உள்ளது. இதனால் பல இடங்களில் மெட்ரோ சேவை இன்னும் விரிவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஹோலி பண்டிகை காரணமாக டெல்லி மெட்ரோ பயண நேரத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.
அதன்படி அனைத்து வழித்தடங்களிலும் இன்று மதியம் வரை மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் பிறகு வழக்கம் போல் இயங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மெட்ரோ ரயில் சேவையை போலவே டெல்லியில் அரசு பேருந்துகளும் இன்று பிற்பகல் வரை இயங்காது என போக்குவரத்து கழகங்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here