இது நடக்காமல் இருக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.., டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!!

0
பள்ளி மாணவர்களுக்கு ஷாக்  நியூஸ்..,அக்.10 ம் தேதியே பள்ளிகளை திறக்க முடிவு - கல்வித்துறை அதிரடி!!

தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் உடல் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சல் சிறியவர் முதல் பெரியவர் என அனைவரையும் பாதிக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் சளி காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது, உயர்ந்து கொண்டே போகிறது. இருப்பினும் இந்த காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

இந்நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டுமானால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தான் நல்லது, மாணவர்களுக்கு கல்வி முக்கியம் என்றாலும் அதை விட அவர்களின் உடல் நலனை பாதுகாப்பது மிக முக்கியம். மேலும் புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததன் பலனாக அங்கு நோய் பரவல் குறைந்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அலட்சியம் காட்டாமல், தமிழ்நாட்டிலும் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here