ஏகே 61 டைட்டிலை வெளியிட்ட படக்குழுவினர்.., இணையத்தை தெறிக்க விட்ட அஜித் ரசிகர்கள்!!

0

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தின் தலைப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

ஏகே 61:

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஜொலிப்பவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபகாலமாக நடிகர் அஜித் ஒரு இயக்குனருடன் கை கோர்த்து விட்டால், தொடர்ந்து அவர்களின் இயக்கத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், விவேகம், விஸ்வாசம் திரைப்படங்களும், ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை , வலிமை ஆகிய படங்களும் அடங்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் உடன் இணைந்து ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்குமார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் சில பல காரணத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடிகர் அஜித் குமார் தனது பைக்கில் இமயமலையில் இருந்து லடாக்கிற்கு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஒரு வாரமாக அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ஏகே 61 படத்தை குறித்து எந்தவித அப்டேட் வெளியே வராமல் இருந்த நிலையில், தற்போது ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் தலைப்பு ‘துணிவே துணை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை நடிகர் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here