பாபா ராம்தேவுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்…டாக்டர்கள் இன்று கருப்பு தினம் அனுசரிப்பு!!!

0

பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவத்துக்கும், மருத்துவர்களுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று கருப்பு தினமாக அனுசரிப்பதாக டெல்லி ரெஸிடென்ட் மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அலோபதி மருத்துவம், குறித்து பாபா ராம்தேவ் சமீபத்தில் “நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது. இது தோல்வியடைந்த மருத்துவ முறை. கொரோனாவை விட அலோபதி மருந்துகளை உட்கொண்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர்” என சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

பாபா ராம்தேவின் பேச்சு மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த வெறுப்புணர்வை உருவாக்கிவிடும் எனவே அலோபதி மருத்துவத்துக்கு எதிராக அவதூறுகளை தெரிவித்த பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக குற்றச்சாட்டின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.மேலும், ராம்தேவுக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் மோசமாக கருத்துக்களை தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் தங்கிப் பணியாற்றும் ரெஸிடெனட் மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து அவர்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here