திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு – போட்டியின்றி தேர்வு!!

0

திராவிட முன்னேற்ற கழகத்தின் (திமுக) பொதுச்செயலாளர் ஆக துரைமுருகனும், பொருளாளர் ஆக டி.ஆர் பாலு அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமை:

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அரசியல் காட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இம்முறை ஆட்சியைக் கைப்பற்றி, முதல்வர் சீட்டில் அமர திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் வரும் செப்டம்பர் 9ம் தேதி திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டம், முக ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இம்முறை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் அறிவிக்கப்படுவார்கள் என ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதற்காக விண்ணப்பங்கள் திமுக தலைமை அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக பொருளாளர் ஆக இருந்த துரைமுருகன் அப்பதவியை ராஜினாமா செய்தார். பொருளாளர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என ஆர் ராசா மற்றும் கனிமொழி நேற்று அறிவித்த நிலையில் டி.ஆர் பாலு அதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆன்லைனில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் – அமைச்சர் கேபி அன்பழகன் அறிவிப்பு!!

திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர் பாலு ஆகியோர் வேட்புமனு அளித்தனர். இவர்களை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை திமுக தலைவர் ஸ்டாலின், செப்டம்பர் 9 அன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் வெளியிட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here