Home பொழுதுபோக்கு சினிமா திருச்சியில் மருத்துவ தேர்வெழுதிய சாய்பல்லவியை சூழ்ந்த ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்!!

திருச்சியில் மருத்துவ தேர்வெழுதிய சாய்பல்லவியை சூழ்ந்த ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்!!

0
திருச்சியில் மருத்துவ  தேர்வெழுதிய சாய்பல்லவியை சூழ்ந்த ரசிகர்கள்  –  வைரலாகும்  புகைப்படம்!!
saipallavi

ஜார்ஜியாவில் 2016 ஆம் ஆண்டு மருத்துவம் படித்த சாய் பல்லவி பயிற்சி மருத்துவராக பதிவு செய்ய டதிருச்சி தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பு அங்கீகார தேர்வு எழுதினார். அதனை கண்டுக்கொண்ட பலர் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சாய்பல்லவி

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வருபவர் சாய்பல்லவி. பிரபல நடிகையான இவர் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்த்திருந்தார். மலர் டீச்சர் என்று அனைத்து இடங்களிலும் பிரபலமானது.

saipalavi

முதலில் இவர் விஜய் டிவி யில் யார் அடுத்த பிரபு தேவாவில் கலந்துகொண்டவர். பிறகு இவரின் திறமையால் பிரபு தேவாவின் பாடலிலேயே நடனமாடினார்.2016 இல் மருத்துவப்படிப்பை முடித்த சாய்பல்லவி அதன்பிறகு படவாய்ப்புகளால் மருத்துவராக பதிவு செய்துகொள்ள வில்லை. தற்போது படிப்பில் முக்கியத்துவம் காட்டும் சாய்பல்லவி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பு அங்கீகார தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளார்.

sai pallavi
sai pallavi

முகக்கவசம் அணிந்து துப்பட்டா அணிந்து வந்திருந்த சாய்பல்லவியை மற்ற மாணவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். பிறகு அவருடன் செலஃபீ யும் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here