தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் – ஆளுநர் உரையை புறக்கணித்த எதிர்கட்சிகள்!!

0

தற்போது தமிழகத்தின் இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. முதல் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடர் தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து அமளியில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்:

தமிழகத்தில் வரும் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. மேலும் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் முதல் தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் துவங்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் ஆளுநரின் உரையின் போது எதிர்க்கட்சியான திமுகவினர் உரையை புறக்கணித்து அமளியில் ஈடுபட்டனர். கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார். ஆனால் ஆளுநர் உரையை எதிர்க்கும் வகையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்பு ஆளுநர் தனது உரையை துவக்கினார். ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாடினார். இதனை பேரவைத்தலைவர் தமிழில் தனபால் மொழிபெயர்த்தார்.

இதனை அடுத்து அலுவல் ஆய்வு கூட்டம் பேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெறவுள்ளது. பேரவை கூட்டத்தை எத்தனை நாள் நடத்த வேண்டும் என்பது குறித்து துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் முடிவு செய்ய உள்ளனர். நடப்பு கூட்டம் வரும் 5ம் தேதி வரை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் ஆளுநர் உரையில் விவாதம் நடைபெறும் இதற்கு தமிழக முதல்வர் பதிலளிக்க உள்ளார்.

ஏப்ரலில் வெளியாகும் கார்த்தியின் சுல்தான் – படக்குழு அறிவிப்பு!!

மேலும் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்த உள்ளனர். இதேபோல் பல மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க உள்ளனர். மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து இந்த கூட்டத்தில் தகவல் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here