
தமிழகத்தில் வருகிற 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் பலரும் பட்டாசுகள், புத்தாடைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் சனி, ஞாயிறு என வார விடுமுறை போல் முடிந்துவிடுமோ? என மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதோடு திங்கள்கிழமை வேலை நாட்களாக இருந்தால் தீபாவளி பண்டிகையன்று இரவே பேருந்து மற்றும் ரயில்களில் பயணிகள் நெரிசல் உள்ளிட்ட சிரமத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. எனவே நவ.13 திங்கள்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு அரசாணை வெளியிட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.