“லியோ – 2” எப்போ ?? அப்டேட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. குஷியில் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தளபதி நடிப்பில் உருவான லியோ திரைப்படம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத் திரைப்படம் விமர்சன ரீதியாக சரிவை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டியது. இந்நிலையில் லியோ 2 குறித்து ஓர் முக்கிய தகவல் கசிந்துள்ளது.

அதாவது நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘இறுதிப்போர்’என்ற கிராஃபிக்ஸ் நாவல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் . அப்பொழுது லியோ 2 திரைப்படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியதற்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள், லியோ 2 கதை இருக்கு ஆனால் அவர் OK சொல்லணும் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது லியோ 2 திரைப்படம் உறுதியாக நடைபெறும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here