கோலிவுட் திரையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் உருவாகி இருந்த ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்நிலையில் இவர் நடித்து 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்திருந்த ”பையா” திரைப்படம், இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.


மேலும் இப்படத்தின் 2 ஆம் பாகம் வர போவதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது. இதையடுத்து யார் பையா 2 படத்தில் ஹீரோவாக நடிப்பார் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது முரளியின் 2 ஆவது மகன் ஆகாஷ் முரளி தான் பையா 2 வில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.