நீ தங்குவியா இந்த வூட்டுல? சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தை பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர்!!!

0
நீ தங்குவியா இந்த வூட்டுல? சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தை பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர்!!!
நீ தங்குவியா இந்த வூட்டுல? சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தை பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர்!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் சக்க போடு போட்டது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் வெளியான இந்த படத்தில் சிவாவுடன் இணைந்து அதிதி சங்கர், சரிதா, மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட ரூ.89 கோடிக்கு மேல் வசூலித்த மாவீரன் திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தை குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், நான் இப்போது தான் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தை பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது.

“லியோ” திரைப்படம் படைத்த அடுத்த சாதனை.., என்னனு தெரியுமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

ஏழை மக்களை மற்ற இடங்களுக்கு குடிபெயர்வதில் இருக்கும் அரசியலை வெட்ட வெளிச்சமாக காட்டி நல்ல முறையில் படத்தை எடுத்துள்ளீர்கள். குறிப்பாக படத்தின் கற்பனை பகுதி அருமையாக இருந்தது, அதில் இருந்த அரசியல் தாக்கமாக அருமையாக இருந்தது. நீ தங்குவியா இந்த வூட்டுல? படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here