தோனி தான் எப்பவும் மெயின் அவர டீம்ல சேருங்க..அந்த தம்பியை சாய்ஸ்ல வைங்க – முகமது கைப் அதிரடி..!

0

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் தோனியை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.

தோனி இல்லை..!

தோனி கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை.அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றே கருதப்படுகிறது. அதற்கு தோனி தன் பார்மை நிரூபிக்க வேண்டும் அதற்கு 2020 ஐபிஎல் தொடரை அவர் பயன்படுத்த எண்ணி இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இடையே கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மாற்று விக்கெட் கீப்பராக இருக்கலாம்..!

இந்நிலையில், ராகுல் எதிர்காலத்தில் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பார் என எண்ணுகிறார்கள். ஆனால் நான் ராகுல் மாற்று விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

முதன்மை விக்கெட் கீப்பர் காயம் அடைந்தால் அவர் அணியில் இல்லாவிட்டால், அப்போது நாம் ராகுலை விக்கெட் கீப்பிங் பணி செய்ய அழைக்கலாம். ஆனால் அவரை முதன்மை விக்கெட் கீப்பராக பயன்படுத்தினால் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

என் பார்வை வேறு – கைப்..!

மேலும் பலரும் தோனி ஐபிஎல் தொடரில் எப்படி ஆடப் போகிறார்? அதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் இடம் பெறுவாரா? என்றெல்லாம் பேசி வருகிறார்கள். ஆனால் என் பார்வை அதில் இருந்து மாறுபட்டது.

நான் தோனி பார்மை ஐபிஎல் ஆட்டத்தை வைத்து முடிவு செய்ய மாட்டேன். அவர் மாபெரும் பேட்ஸ்மேன். அவர் இப்போது தகுதியுடன் இருக்கிறார். அவர் ஐபிஎல் ஆட விரும்புகிறார் கேப்டன்சி செய்ய இருக்கிறார் தான் ஆடத் தயாராக இருப்பதை காண்பிக்கிறார்.

தோனிக்கு ஆதரவு..!

தோனிடம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அழுத்தத்தில் போட்டிகளை எப்படி வெல்வது என தெரிந்து வைத்துள்ளவர். எனவே அவரை ஒதுக்கித் தள்ளுவது நியாயம் அல்ல.

தோனியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் பாக்கி உள்ளது. இத்தனை நீண்ட காலம் ஒரு கிரிக்கெட் வீரர் ஆடினால் அவரது கிரிக்கெட் வாழ்வில் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். இது தோனிக்கு மட்டுமல்ல அனைத்து கிரிக்கெட் வீரருக்கும் ஏற்படும் என இவ்வாறு தோனிக்கு ஆதரவாக பேசினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here