மீண்டும் மிரட்ட வரும் டிமான்டி காலனி 2.., ட்ரைலர் தேதியை குறித்த அருள்நிதி – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
மீண்டும் மிரட்ட வரும் டிமான்டி காலனி 2.., ட்ரைலர் தேதியை குறித்த அருள்நிதி - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அருள்நிதி. இவர் சினிமா கேரியரில் மாஸ்டர் பீஸ் படம் என்றால் அது கண்டிப்பாக  டிமான்டி காலனி திரைப்படம் தான். இப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
மேலும் இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில்  டிமான்டி  காலனி 2 படத்தை குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அருள்நிதி நடிக்கும் டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here