வாகன ஓட்டிகளுக்கு இந்த சான்றிதழ் கட்டாயமா? அரசின் புதிய விளக்கம்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
வாகன ஓட்டிகளுக்கு இந்த சான்றிதழ் கட்டாயமா? அரசின் புதிய விளக்கம்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
வாகன ஓட்டிகளுக்கு இந்த சான்றிதழ் கட்டாயமா? அரசின் புதிய விளக்கம்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் வரும் 25ம் தேதி முதல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் :

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதற்கு, பெட்ரோல் டீசல் மூலம் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. எனவே காற்று மாசுபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், டெல்லி அரசு அண்மையில் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது முறையான மாசு கட்டுப்பாடு சான்றிதழ் (PUCC ) இருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்பப்படும். மேலும் சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய கூடாது என பெட்ரோல் பங்க் நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

வரும் அக்டோபர் 25ம் (October 25) தேதியில் இருந்து இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் பெட்ரோலியம் மற்றும் டீசல் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த புதிய நடவடிக்கையால் பெட்ரோல் பங்க்களில் குழப்பம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமைகள் ஏற்படலாம் என்று அரசாங்கத்திடம் தெரிவித்ததை அடுத்து தற்போது அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

தொடங்கிய ரோஸ்கர் மேளா திட்டம்.,,நியமனக் கடிதங்களை வழங்கிய மத்திய அமைச்சர்!!

அதாவது தலைநகர் டெல்லியில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு செல்லுபடியாகும் மாசுபாடு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக முடிவு செய்த படி அக்டோபர் 25 முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படாது என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here