விளம்பரத்திற்காக ரூ.1,100 கோடி., ஆனா இந்த திட்டத்திற்கு நிதி இல்லையா? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!!!

0
விளம்பரத்திற்காக ரூ.1100 கோடி உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
நாடு முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பொதுமக்களுக்கு விரைவு போக்குவரத்து பயணங்களை மத்திய மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெல்லி முதல் காசியாபாத் மீரட் வரை 17 கி.மீ. தொலைவிற்கு பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (RRTS) திட்டத்தை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 20ஆம் தேதி திறந்து வைத்தார். இத்திட்டத்திற்காக டெல்லி அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் முன்னதாக அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது “விளம்பரங்களுக்காக ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் மாநில அரசுக்கு, தேசிய திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய தாமதிப்பது ஏன்?. விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மீதமுள்ள ரூ.415 கோடியை, இன்னும் ஒரு வாரத்தில் RRTS திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here